புதுடெல்லி: முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளது.
இந்த வழக்கை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி 2018ஆம் ஆண்டு தொடுத்தார்.
தனக்கு நெருங்கிய நண்பா்களுக்கும் உறவினா்களுக்கும் ரூ.4,800 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் துறை டெண்டா்களை ஒதுக்கியதன் மூலம் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத் துறை தமது முதல்வர் தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோதமாக ஆதாயம் அடைந்துள்ளாா். இதன் மூலம் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது,” என்று அவர் தமது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படி, வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூலை 18ஆம் தேதி, ஆர்.எஸ். பாரதியின் மனுவைத் தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தரப்பில் கடந்த வாரம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ், பீலா எம். திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கட்கிழமை விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், விசாரணை அடுத்த வாரத்துக்குப் பட்டியலிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.