கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே மோயர் சதுக்கம் பகுதியில் கடந்த திங்கட்கிழமை பத்துக்கும் மேற்பட்ட கடைகளை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன.
கொடைக்கானலில் பேரிஜம் ஏரிக்குச் செல்லும் வழியில் தொப்பி தூக்கிப் பாறை, மதிகெட்டான் சோலை, வியூ பாய்ண்ட், அமைதிப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களை பார்வையிட சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவர்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பேரிஜம் ஏரிப் பகுதிகளில் யானைகள் குட்டிகளுடன் சுற்றித் திரிகின்றன. அதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்வதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

