சென்னை: கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டை முன்னிட்டு அவருக்கு தஞ்சையில் சிலை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ்ஒளிக்கு சிலை அமைக்கப்படும்.
பள்ளி மாணவர்களுக்குத் தமிழ் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்சார்ந்த போட்டிகள் நடத்தப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
இவரது இயற்பெயர் விஜயரங்கம். 21 செப்டம்பர் 1924ஆம் தேதி பிறந்த இவர், கவிதைகள் மட்டுமல்லாது கதைகள், கட்டுரைகள், இலக்கியத் திறனாய்வுகள், மேடை நாடகங்கள், குழந்தைப் பாடல்கள் எனப் பல இயற்றியவர்.
2023 செப்டம்பர் 21அன்று தொடங்கும் கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டு விழாவினை உலக தமிழ்சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கம் ஒன்றினை நூற்றாண்டு விழாக் குழுவினர் நடத்தவிருக்கின்றனர்.
தாழ்த்தப்பட்ட மக்களின் இழிநிலை கண்டு, அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் சமூகத்தில் நிலவும் சாதிய வேறுபாடுகளையும் கவிதைகளில் சாடி எழுதினார். தமிழ் ஒளி, விஜய ரங்கம், விஜயன்,சி.வி.ர என்பன அவருடைய புனை பெயர்கள் ஆகும். முன்னணி, புதுமை இலக்கியம், சாட்டை போன்ற இதழ்களில் பணியாற்றினார்.

