முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியின் நேர்முக உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை

முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியின் நேர்முக உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை

fallback-0

20 Sep 2023 - 5:51 pm

1 mins read

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியின் நேர்முக உதவியாளராக இருந்த வெங்கடகிருஷ்ணனுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வெங்கடகிருஷ்ணனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.5 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. வெங்கடகிருஷ்ணன் மனைவி மஞ்சுளாவுக்கு 18 மாதங்கள் சிறை; ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.