வீடு புகுந்த கொள்ளையனைக் காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்த பெண்

வீடு புகுந்த கொள்ளையனைக் காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்த பெண்

1 mins read
d769700f-9420-4c52-b4bb-6db322388124
படம்: - தமிழ் முரசு

சென்னை: வியாசர்பாடியில் வசித்து வருகிறார் ஜமுனா. இவரது வீட்டில் திங்கட்கிழமை அதிகாலையில் கொள்ளையன் ஒருவன் புகுந்துவிட்டான்.

கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய ஜமுனா, வீடு திறந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் திருடன் இருப்பதை அறிந்துகொணட அவர், அவன் தப்பிக்காத வகையில் மெதுவாகக் கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டார்.

பின்னர் அக்கம்பக்கத்தினரை அழைத்ததோடு காவல்துறைக்கும் அவர் தகவல் கொடுத்தார். கெட்டிக்காரத்தனமாக திருடனை வீட்டுக்குள் பூட்டிவைத்து, காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்த ஜமுனாவைக் காவல்துறையும் அக்கம்பக்கத்தினரும் பாராட்டினர்.

குறிப்புச் சொற்கள்