ராமேசுவரம்: உயிரைப் பணயம் வைத்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீன்வர்கள் இலங்கைக் கடற்படையினரின் இன்னல்களுக்கு ஆளாகி வருவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை, ராமேசுவரத்தைச் சேர்ந்த மீன்வர்கள் சிலர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டனர். அப்போது அங்கு வந்து அவர்களைச் சுற்றி வளைத்த இலங்கைக் கடற்படையினர், சுற்றுக்காவல் கப்பலில் குவித்து வைக்கப்பட்டிருந்த கற்களை எடுத்துச் சரமாரியாகத் தாக்கியதோடு அவர்களை அப்பகுதியில் இருந்து விரட்டியடித்ததாகக் கூறப்படுகிறது.
தகவல் அறிந்த ராமேசுவரம் மீன்வளத்துறை அதிகாரிகள் உடனடியாக கடலுக்குள் சென்று சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.