9 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ரூ.10½ லட்சம் கோடி நிதி

9 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ரூ.10½ லட்சம் கோடி நிதி

1 mins read
cebd6fb6-31d2-4d41-a97a-537168cd8431
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை. - கோப்புப்படம்

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” என்ற பெயரில் நடைப்பயணம் மேற்கொண்டார். அப்போது அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஆளும் திமுக கட்சியையும் இந்தியா கூட்டணியையும் சாடியுள்ளார்.

“ஒன்பது ஆண்டு காலத்தில் பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு ரூ.10 லட்சத்து 76 ஆயிரம் கோடி நிதி அளித்துள்ளது. ஆனால் தி.மு.க. அரசு தமிழகத்தைக் கடன்கார மாநிலமாக மாற்றி உள்ளது. தி.மு.க. அரசு கடந்த 29 மாத ஆட்சிக்காலத்தில் 7 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளது.

“மோடி என்ற ஒற்றை மனிதனை வீழ்த்துவதற்காக 28 கட்சிகள் சேர்ந்து இந்தியா கூட்டணி என்று பெயர் வைத்துள்ளனர். வருகிற 2024ஆம் ஆண்டு மக்கள் பெரும்பாலானவர்கள் மோடியை ஆதரித்து 3வது முறையாக தேர்ந்தெடுக்க வேண்டும்,” என்று அவர் கேட்டுக் கொண்டார்.

குறிப்புச் சொற்கள்