விருத்தாச்சலம்: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அர்ச்சகர் பயிற்சி பெற திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர், மதுரை, திருவரங்கம், சென்னை ஆகிய நகரங்களில் பயிற்சி பள்ளிகள் உள்ளன. இங்கு ஓராண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 94 பேரில் மூன்று பெண்கள் முதல்முறையாக அர்ச்சகர் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றுள்ளனர். அவர்களில் இரண்டு பெண் அர்ச்சகர்களும் ஒரு ஆண் அர்ச்சகரும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசனை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.