உறுப்பு நன்கொடையாளருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு: ஸ்டாலின்

1 mins read
7e06db0f-6593-4539-855d-c8ed8e73c6b3
மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம் 

சென்னை: தமிழ்நாட்டில் ஒருவர் இறப்பதற்கு முன் அவர் தனது உறுப்புகளை தானம் வழங்குவதாக அறிவித்து இருந்தால் அவரின் இறுதிச்சடங்குகளை அரசு மரியாதையுடன் அரசாங்கமே ஏற்று நடத்தும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார்.

எக்ஸ் இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ள பதிவில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பல்வேறு தரப்பினரும் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவிலேயே உடல் உறுப்பு நன்கொடையைப் பொறுத்தவரை தமிழ்நாடுதான் தொடர்ந்து முன்னணி மாநிலமாகத் திகழ்வதை அவர் சுட்டினார்.

எடுத்துக்காட்டாக, குடும்பத்தில் ஒருவர் மூளைச்சாவு நிலையை அடையும்பட்சத்தில் அவருடைய உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வரும் உறவினர்களின் தியாகம் தன்னலமற்றது என்று வர்ணித்த முதல்வர், அத்தகைய நன்கொடையாளர்களை அங்கீகரித்துப் போற்றிடும் வகையில் அவர்களின் இறுதிச்சடங்கை அரசாங்கமே ஏற்று அரசு மரியாதையுடன் நடத்தும் என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, உடல் உறுப்பு நன்கொடையாளர்களை கௌரவப்படுத்த

குறிப்புச் சொற்கள்