கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் வட்டாரத்தில் உள்ள ஏழு காட்டுப் பகுதிகளில் திரியும் யானைகள் மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்குள் வந்து ஆபத்து விளைவிப்பதைத் தடுப்பதற்காக வனத்துறை வாய்க்கால் போன்ற பள்ளமான பகுதிகளை அமைத்து இருக்கிறது.
அத்தகைய ஓர் ஏற்பாட்டை 25 கி.மீ. தொலைவுக்கு நீட்டிக்க வனத்துறை திட்டமிடுகிறது.
இப்போது 150 கி.மீ. தொலைவுக்கு அத்தகைய பள்ளமான பகுதிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
அந்தப் பகுதிகளில் மண் சரிந்து, தாவரங்கள் மண்டி இருக்கின்றன.
அவற்றை எல்லாம் அகற்றி பராமரிக்கவும் அந்தத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன்தொடர்பில் அந்தத் துறை மாநில அரசிடம் தனது யோசனைகளைத் தெரிவித்து அவற்றுக்கான அனுமதியைக் கேட்டு இருக்கிறது.
இது பற்றி கருத்து கூறிய கோயம்புத்தூர் மாவட்ட காட்டு வனத்துறை அதிகாரி என். ஜெயராஜ், இந்த மாவட்டத்தின் காட்டு எல்லை 350 கி.மீ. தொலைவு நீண்டு இருக்கிறது.
அந்த எல்லை ஓரமாக குடியிருப்புப் பகுதிகள் இருக்கின்றன. ஏற்கெனவே 150 கி.மீ. தொலைவுக்கு பள்ளமான பகுதிகளை இந்தத் துறை உருவாக்கி இருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
அவற்றில் இறங்கி யானைகள் ஏறி குடியிருப்புப் பகுதிகளுக்குள் வர முடியாது. இப்போது அந்தப் பள்ளங்களை பராமரிக்க வேண்டி இருக்கிறது. இதற்குப் பணம் வேண்டும். அரசாங்கத்திடம் இதன் தொடர்பில் கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது என்று வனத்துறை அதிகாரி கூறினார்.

