மதுரை: மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே பெருங்கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது.
வளையம் போன்ற ஆபரணம் வரையப்பட்டுள்ளது. திருமங்கலம் மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் கொட்டாணிபட்டி கிராமத்தில் கற்காலத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுக் கப்பட்டது.
பண்டியன் என்பவர் தன் வீட்டிற்குக் கழிவுநீர் தொட்டி கட்டுவதற்குக் குழி தோண்டியபோது அது காணப்பட்டது.
தொடர்ந்து அது பற்றி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்தத்தாழி பழைய கற்காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று தெரிவித்தனர். தாழி கிராம நிர்வாக அதிகாரி உதவியுடன் கிராம நிர்வாக அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளது.