பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரியின் சர்ச்சை பேச்சு குறித்து உரிமை மீறல் குழு விசாரிக்க கனிமொழி, திருமாவளவன் வலியுறுத்து

பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரியின் சர்ச்சை பேச்சு குறித்து உரிமை மீறல் குழு விசாரிக்க கனிமொழி, திருமாவளவன் வலியுறுத்து

1 mins read
81ebc8e2-abff-414b-8617-1e5c3d5159ad
திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி நடந்த மக்களவைக் கூட்டத்தில் சந்திரயான் வெற்றி தொடர்பான விவாதம் நடந்தது. அப்போது சக உறுப்பினர் டேனிஷ் அலி மீது அவதூறு மற்றும் வெறுப்பை உமிழும் வகையில் சர்ச்சைக் கருத்துகளை பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பிதுரி கூறியிருந்தார்.

இது குறித்து திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோர் மக்களவைத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

அக்கடிதத்தில், “பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பிதுரி, சக உறுப்பினர் டேனிஷ் அலியிடம் வெறுப்புக் கருத்து களைக் கூறியிருந்தார். தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்த அவரது பேச்சு மக்களவைக் குறிப்பிலும் இடம்பெற்றுள்ளது. எனவே, அவருக்கு எதிராக உரிமை மீறல் குழு விசாரிக்க வலியுறுத்தி, இந்த விவகாரத்தை உரிமை மீறல் குழுவின் விசாரணைக்கு பரிந்துரைக்கும்படியும் அந்தத் தலைவர்கள் அக்கடிதத்தில் கேட்டுக் கொண்டனர்.

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் செயல்பட்டதால் உரிமை மீறல் குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும் வரை ரமேஷ் பிதுரியை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்