அண்ணாமலையை மாற்ற அமித் ஷா மறுப்பு

அண்ணாமலையை மாற்ற அமித் ஷா மறுப்பு

1 mins read
95b63d64-36b6-479e-9646-d8cfe5c82647
படம்: - தமிழ் முரசு

சென்னை: தமிழகத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிவரும் அண்ணாமலையை பாஜக மாநிலத் தலைவர் பதவியில் மாற்றுங்கள். இல்லையெனில் கூட்டணியில் இருந்து வெளியேறிவிடுவோம் என்ற முடிவுடன் டெல்லி சென்ற அதிமுக நிர்வாகிகளையும் முன்னாள் அமைச்சர்களையும் சந்திக்க பாஜகவின் அமித் ஷா சந்திக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

அத்துடன், பாஜகவில் எந்த ஒரு மாற்றமும் செய்ய முடியாது என்பதைத் திட்டவட்டமாக அமித் ஷா தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் எடப்பாடி பழனிசாமி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். கடந்த சில மாதங்களாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுக செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது.

குறிப்பாக இருவரும் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்குள்ளும் யார் பெரியவர்கள் என்ற மோதல் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்