சென்னையில் முகமூடி கொள்ளை

சென்னையில் முகமூடி கொள்ளை

1 mins read
f15660ee-0e7c-463b-adf7-02f4d7312043
முகமூடி கொள்ளையை அடுத்து காவல்துறை கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது. - படம்: ஊடகம்

சென்னை: மீண்டும் முகமூடி கொள்ளை நடந்துள்ளதை அடுத்து சென்னையில் காவல்துறையின் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது.

வெள்ளிக்கிழமை அதிகாலை வேளையில், வில்லிவாக்கத்தில் வசிக்கும் சோழன்(வயது 66), அவரது மனைவி வனஜா(60) ஆகியோரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் இருவரையும் கட்டிப்போட்டனர்.

பின்னர், 70 பவுன் தங்க நகைகளையும் ரூ.4 லட்சம் ரொக்கத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் சந்தேகத்துக்குரிய வகையில் யாரேனும் நடமாடினால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்