சிவகங்கை: போதுமான ரயில்கள் நிற்காததால் மத்திய அரசைக் கண்டித்து சிவகங்கையில் சனிக்கிழமை முழு அடைப்பு, வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
சிவகங்கை ரயில் நிலையத்தில் தற்போது மன்னார்குடி வரை செல்லும் ரயில் மட்டுமே நிறுத்தப்படுகின்றது. மற்ற பல ரயில்கள் நிற்பதில்லை.
மேலும், சிவகங்கையில் இருந்து பகல் நேரத்தில் சென்னைக்கு ரயில்கள் இயக்கப்படுவதில்லை. எனவே அனைத்து ரயில்களும் சிவகங்கையிலும் நின்று செல்லவேண்டும் என்று அம்மாவட்ட மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனினும், இக்கோரிக்கை நிறைவேறவில்லை. இதையடுத்து, அம்மாவட்ட மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அனைத்து கட்சிகள், வணிகர் சங்கங்கள் இணைந்து சனிக்கிழமை கடையப்பு, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமானோர் ரயில் தண்டவாளத்தில் மறியலில் ஈடுபட்டனர்.

