தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாணவிக்குப் பாலியல் தொல்லை: காவல் உதவி ஆய்வாளர் கைது

1 mins read
59d6fdf7-4a87-446f-b5b1-703c7fb2efd6
உதவி ஆய்வாளர் ஜெபக்குமார். - படம்: ஊடகம்

சென்னை: ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் காவல்துறை உதவி ஆய்வாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதானார்.

55 வயதான ஜெபக்குமார் என்ற அந்த அதிகாரி 2019ஆம் ஆண்டு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.

இந்நிலையில், தாம் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள 14 வயது மாணவிக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அம்மாணவி தன் பெற்றோரிடம் விவரம் தெரிவிக்க, பதறிப்போன பெற்றோர் ராயபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

விசாரணையில், தாம் வரம்பு மீறியதை ஒப்புக்கொண்டார் ஜெபக்குமார். இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவாகி உள்ளது.

குறிப்புச் சொற்கள்