சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர், சென்னை – நெல்லை இடையேயான வந்தே பாரத் சிறப்பு ரயிலுக்கான சிறப்பு நிகழ்ச்சி, கருத்தரங்கம் என்று தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளில் திருமாவளவன் பங்கேற்றார்.
இதையடுத்து அவருக்கு திடீரென உடல் சோர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக திருமாவளவன் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.

