சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது. இது குறித்துப் பேசிய தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, “பிளவு என்பது கொள்கை ரீதியாக இருக்க வேண்டும். எங்களுக்கு பாஜக கொள்கை பிடிக்கவில்லை என்று சொல்லி அதிமுக வெளியே வந்து இருந்தால் அது போற்றுதலுக்குரிய ஒரு விஷயம். தனி மனித விரோதம் நீடிக்காது. அது சரியும் அல்ல,” என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பாக சாதிவாரிக் கணக்கெடுப்பின் அவசியமும் முக்கியத்துவமும் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னை காமராஜர் அரங்கத்தில் திங்கட்கிழமை நடந்தது. அந்தக் கருத்தரங்கத்திற்குத் தலைமை தாங்கிய கே.எஸ்.அழகிரி இவ்வாறு குறிப்பிட்டார்.

