மாமல்லபுரத்தில் கொண்டாட்டம்

1 mins read
e399a0e4-95a5-45fc-a8d2-f0c55f33f177
மாமல்லபுரத்தில் வெளிநாட்டவர்கள் நெற்றியில் திலகமிட்டு வரவேற்கப்பட்டனர். - படம்: இந்திய ஊடகம்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தின விழா கொண்டாடபட்டது. பரதநாட்டியம், கரகாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், பொய்கால்குதிரை என பாரம்பரிய நடனங்கள் உற்சாகத்தை வரவழைத்தன.

செங்கல்பட்டு மாவட்ட துணை ஆட்சியர் லட்சுமிபதி, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், முன்னதாக திருக்கழுகுன்றம், கடம்பாடி, தண்டரை, மானாமதி சுற்றுவட்டார பகுதி இருளர் பழங்குடி பெண்கள் தங்கள் வீட்டில் இருந்து உற்பத்தி செய்யும் கை எம்பிராய்டரி துணிகளை, அர்ச்சுனன்தபசு அருகே கடைகள் அமைத்து காட்சிப் படுத்தியிருந்தனர்.

மயில், பழங்குடி வேட்டை, மாம்பழம், மயில், கோலம் உள்ளிட்ட வடிவமைப்புகள் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இருந்தது. மாமல்லபுரம் அபிராமி யோகாலயாவினர், இந்தப் பழங்குடி விழாவுக்கு ஏற்பாடு செய்தனர்.

இவ்விழாவில் செங்கல்பட்டு மாவட்ட துணை ஆட்சியர் லட்சுமிபதி, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், சிற்பக் கல்லூரி முதல்வர் ராமன், சுர்தீப் ரங்கசாமி, வழிகாட்டிகள் உட்பட 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்