அண்ணாமலை: நீலகிரி மக்கள் பிரச்சினை தீர்க்கப்படும்

அண்ணாமலை: நீலகிரி மக்கள் பிரச்சினை தீர்க்கப்படும்

1 mins read
c1992a2c-6f79-43a1-8577-736ae174c953
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா மக்கள் பிரச்சினைகள் பற்றி நாடாளுமன்றத்தில் பேசுவதில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். - கோப்புப்படம்: தமிழக ஊடகம்

உதகை: நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றால், மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

உதகை சேரிங்கிராஸில் பாதயாத்திரையை தொடங்கிய அவர், கமர்சியல் சாலை வழியாக அப்பர் பஜார், மெயின் பஜார், பேருந்து நிலையம், லோயர் பஜார் வழியாக ஏடிசி சுதந்திர திடலில் நிறைவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

“இந்தியாவில் நடைபெற்ற ‘ஜி-20’ மாநாட்டில் பங்கேற்ற உலகத் தலைவர்களுக்கு பாரதப் பிரதமர் வழங்கிய ஆறு பரிசுப் பொருட்களில் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத் தூளும் இடம் பெற்றுள்ளது.

“திமுக கட்சியைச்சேர்ந்த நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா, உள்ளூர் மக்களின் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் பேசாமல், இந்து தர்மம், சனாதனம், மணிப்பூர் கலவரம், வெளி மாநில, வெளிநாடுகளின் பிரச்சினைகளை மட்டுமே பேசுகிறார். இதனால் நீலகிரி மக்களுக்கு எந்த எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை,” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்