மாமல்லபுரம்: இந்தியாவின் பெண் அறிவியல் வல்லுநர்கள் தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் சக்தி-2023 என்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது பற்றி விவாதித்தனர்.
‘இஷ்ரே’ என்ற இந்தியப் பொறியாளர்கள் கூட்டமைப்பின் கல்பாக்கம் பிரிவு, இந்திய பெண் அறிவியல் வல்லுநர்கள் சங்கம், இந்திராகாந்தி அணு ஆய்வு மையம் ஆகியவை இணைந்து அந்தக் கருத்தரங்கை நடத்தின. அதில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.
இந்திராகாந்தி அணு ஆய்வு மையத்தின் இயக்குநர் வெங்கட்ராமன் தலைமையில் நடந்த அந்தக் கருத்தரங்கில் பசுமை தொழில்நுட்ப ஆய்வு, பாதுகாப்பு ஆய்வு, வனப்பகுதியின் வான்வழி பாதுகாப்பு, 2070ம் ஆண்டிற்குள் கரிமக் கழிவை முற்றிலும் குறைப்பது, காற்றின் மாசுபாட்டைக் கண்காணித்து அதைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய ஆய்வுகள், திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

