சென்னை: மருத்துவக் கல்வி தொடர்பான உரிமைகளைக் காக்க தமிழக அரசு உறுதியாகக் குரல் கொடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்க இயலாத வகையில் வெளியிடப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் அடங்கிய அறிக்கையை மருத்துவ ஆணையம் உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த விவகாரத்தில் தமிழக அரசு அதன் அமைதியை கலைத்துவிட்டு, அதன் மருத்துவக் கல்வி உரிமைகளைக் காக்க உறுதியாக குரல் கொடுக்க வேண்டும்.
“உலகம் முழுவதும் மருத்துவக் கல்விக் கட்டமைப்புகளை அதிகரிக்க வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வரும் நிலையில், மருத்துவ ஆணையத்தின் புதிய விதி மிகவும் பிற்போக்கானது.
“அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் இந்த விதிமுறைகள் தமிழகம் போன்ற வளர்ந்த மாநிலங்களையே பாதிக்கும்,” என்று ராமதாஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

