சென்னை: ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் நெகிழிப் பயன்பாடு அதிகரித்துள்ளது குறித்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நெகிழித் தடை உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரிய வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, ரயில்வே நிர்வாகம் ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் நெகிழிப் பயன்பாட்டை ஊக்குவித்து வருவதாக குறிப்பிட்டது.
மேலும், தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வந்தே பாரத் ரயில்களிலும்கூட அதிக அளவில் நெகிழிப் பொருள்களின் பயன்பாடு எனவே, இதைத் தடுப்பது குறித்து ரயில்வே நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்தியாவில் ஆண்டுக்கு 430 மில்லியன் டன் நெகிழிப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அதில் மூன்றில் இரண்டு பங்கு நெகிழிப் பொருள்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு குப்பையில் வீசப்படுவதாகவும் நீதிபதிகள் மேலும் குறிப்பிட்டனர்.