பிரேமலதா: கூட்டணிக்காக யாரும் தொடர்புகொள்ளவில்லை

பிரேமலதா: கூட்டணிக்காக யாரும் தொடர்புகொள்ளவில்லை

1 mins read
85c07ff0-7342-487f-8649-c32ae4e6157c
பிரேமலதா. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிக தலைமையை இதுவரை யாரும் அணுகவில்லை என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து கட்சிகளிடமும் நட்புறவு பாராட்டுவதாகக் குறிப்பிட்டார்.

“தேர்தலுக்கான பணிகள், கூட்டணி சார்பான நடவடிக்கைகளை நாங்கள் இன்னும் தொடங்கவில்லை. எனினும் பிற கட்சிகள் இன்னும் எங்களை தொடர்புகொள்ளவில்லை.

“எனவே தேமுதிகவும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை யாருடனும் தொடங்கவில்லை. இதுகுறித்து உரிய நேரத்தில் தேமுதிக தலைவர் அதிகாரபூர்வமாக அறிவிப்பார்,” என்றார் பிரேமலதா.

காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சிப் பிரதிநிதிகளை டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரையும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியையும் சந்திக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்