சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கில், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கில் அவரது நீதிமன்றக் காவலை அக்டோபர் 13ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
அவர் மீதான இரண்டு வழக்குகளில் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மூன்றாவது குற்றப்பத்திரிகையிலும் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை இம்மாத இறுதிக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

