சென்னை: மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டம் என்பது வெறும் மாயை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2024 தேர்தலுக்கு முன்னர் மட்டுமல்ல, 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்னரும் கூட அச்சட்டம் அமலுக்கு வராது என்றார்.
“அந்தச் சட்டத்தை நிறைவேற்ற இயலாத வகையில் இரண்டடு தடைக் கற்களை வேண்டுமென்றே வைத்துள்ளனர். எனவேதான் அச்சட்டம் அமலுக்கு வர வாய்ப்பில்லை என்று உறுதியாகச் சொல்கிறேன்.
“நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது எரிவாயு உருளை, பெட்ரோல் விலை மட்டுமல்ல தக்காளி, வெங்காயம் ஆகியவற்றின் விலைகூட குறையக்கூடும்,” என்றார் ப. சிதம்பரம்.
ரூ.2,000 நோட்டை அச்சடித்து புழக்கத்தில் விட்டுவிட்டு பின்னர் அது செல்லாது என அறிவிப்பு அறிவுப்பூர்வமான அரசு செய்யும் வேலை அல்ல என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அவர் விமர்சித்தார்.

