சென்னை: பாமக நிர்வாகிகள் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், மாவட்டங்களில் கூட்டங்களை நடத்தி தேர்தல் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் பொதுமக்களை அணுகும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அக்டோபர் 3ஆம் தேதி ஒன்றிய, நகர அளவில் இருசக்கர வாகனப் பேரணியை நடத்த வேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.


