தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருநங்கைகளுக்கு உரிமைத் தொகை: கணக்கெடுப்பு நடப்பதாக அமைச்சர் தகவல்

1 mins read
4f78c567-fa96-4a7f-aa7a-82e4779e2eb2
கீதா ஜீவன். - படம்: ஊடகம்

சிவகங்கை: திருநங்கைகளுக்கு உரிமைத் தொகை வழங்குவது குறித்து விரைவில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கணக்கெடுக்கும் பணி நடந்து வருவதாக சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

“உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள் எதிர்வரும் 18ஆம் தேதி வரை மேல்முறையீடு செய்யலாம். முதல்வர் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் இதுவரை 90,000 பேருக்கு முதிர்வுத் தொகை வழங்கப்பட்டுள்ளன.

“அதேபோல் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக 22 திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது,” என்றார் அமைச்சர் கீதா ஜீவன்.

போக்சோ சட்டத்தை தமிழக அரசு கடுமையாக அமல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கப்படுகிறது என்றார்.

இந்த நடவடிக்கைகளை முதல்வரும் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்