அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய விமானத்தில் முதியவர் உயிரிழப்பு

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய விமானத்தில் முதியவர் உயிரிழப்பு

1 mins read
2276bcfd-015a-4181-8dc0-efe6cd094695
எமிரேட்ஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பயணிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. - படம்: ஊடகம்

சென்னை: அமெரிக்காவில் பணியாற்றும் மகனைப் பார்த்துவிட்டு நாடு திரும்பிக் கொண்டிருந்த முதியவர் நடுவானில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

சென்னையைச் சேர்ந்த 64 வயதான சுகிர்தராஜ், தன் மனைவியுடன் அமெரிக்காவில் இருந்து துபாய் வழியாக எமிரேட்ஸ் விமானத்தில் சென்னைக்குப் பயணமானார்.

இந்நிலையில், நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்படவே, விமான ஊழியர்கள் அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

திங்கட்கிழமை காலை அந்த விமானம் சென்னை வந்தடைந்ததும், ஏற்கெனவே தகவல் தெரிவிக்கப்பட்டதால் தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழு, விமானத்துக்குள் சென்று பரிசோதனை செய்தது.

அப்போது சுகிர்தராஜ் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது உறுதியானது. இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்