தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாலையோரம் ஆறாக ஓடிய 3,500 லிட்டர் பால்

1 mins read
153db683-ff94-4963-909b-ebc3026d21e6
எதிரே வந்த லாரிமீது மோதுவதைத் தவிர்க்க நினைத்த பால் லாரி ஓட்டுநர் சாலையோரத்தில் வாகனத்தைச் செலுத்தியபோது கட்டுப்பாட்டை இழந்த பால் லாரி பள்ளத்தில் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. - படம்: இந்திய ஊடகம்

சென்னை: திருவள்ளூர் அருகே சாலையோரப் பள்ளத்தில் ஆவின் பால் லாரி கவிழ்ந்ததால் கிட்டத்தட்ட 3,500 லிட்டர் பால் வீணானது.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பால் குளிரூட்டும் நிலையத்திலிருந்து 7,000 லிட்டர் பாலுடன் ஆவின் லாரி ஒன்று, செவ்வாய்க்கிழமை அதிகாலை திருவள்ளூர் அருகே உள்ள காக்களூர் ஆவின் பால் பண்ணைக்குச் சென்றுகொண்டிருந்தது.

காக்களூர் தொழிற்பேட்டையை நெருங்கும் வேளையில், எதிரே வந்த மற்றொரு லாரிமீது மோதுவதைத் தவிர்க்க பால் லாரி ஓட்டுநர் தனது வாகனத்தை சாலையின் ஓரமாகச் செலுத்தினார்.

ஆனல், எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பால் லாரி, சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால், அதிலிருந்து 3,500 லிட்டர் பால் அந்தப் பள்ளத்தில் ஆறாக ஓடி வீணானது.

தகவலறிந்த காக்களூர் ஆவின் பால் பண்ணை அதிகாரிகளும் திருவள்ளூர் பகுதி காவல்துறையினரும் சம்பவ இடத்துக்குச் சென்று, ஆவின் பால் லாரியை அப்புறப்படுத்தினர். காவல்துறை இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொள்கிறது.

குறிப்புச் சொற்கள்