நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆற்றூரில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சித்ரா, 47, என்ற தாய், அஸ்வின், 19, என்ற மகன், நீது ஆதிரா, 24, என்ற கர்ப்பிணி மகள் ஆகியோர் மரணம் அடைந்தனர்.
ஆதிராவுக்கு திருமணமாகி பிரசவத்துக்காக தாயார் வீட்டுக்கு வந்திருந்தார்.
குமரி மாவட்டத்தில் கனமழை பெய்தது. கணவர் வெளியே சென்றிருந்த நிலையில், தாய், மகன், மகள் ஆகிய மூவரும் வீட்டில் இருந்தபோது வீட்டின் சுற்றுச்சுவரில் மின்கசிவு ஏற்பட்டதால் மின்சாரம் அவர்கள் மீது பாய்ந்துவிட்டது.
அவர்களைப் பார்த்த பக்கத்துவீட்டுக்காரர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மூவரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.