சென்னை: தமிழகத்தில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமிக்கும்படி கட்சி நிர்வாகிகளுக்குத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
39 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நியமிக்கும் பொருட்டு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தினமணி ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இதன் மூலம் தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாகவும் அச்செய்தி குறிப்பிடுகிறது.