தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இஸ்‌ரேல் பதற்றம்: கொடைக்கானலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது

1 mins read
936a36d1-761f-4c9e-82d5-1551f90a3060
கொடைக்கானல். - படம்: ஊடகம்

திண்டுக்கல்: இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் காரணமாக தமிழ்நாட்டின் கொடைக்கானலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

இஸ்‌ரேல் மீதமான பயங்கரவாத தாக்குதலை அடுத்து தமிழகத்தின் கொடைக்கானல் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் யூத குடியேற்றங்கள் உள்ளன. வட்டக்கானல் பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் முகாமிடுவதும் கூட்டு பிரார்த்தனை நடத்துவதும் வழக்கம் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெருமளவிலான இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வருகின்றனர் என்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் பலரும் கொடைக்கானலில் வந்து ஓய்வெடுத்து செல்வது வழக்கம் என்றும் ஏசியா நெட் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

எனவே இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே எப்போது பிரச்சினை ஏற்பட்டாலும் கொடைக்கானல் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இந்தியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் சிலர் கைது செய்யப்பட்டபோது, கொடைக்கானல் உள்ள இஸ்ரேலியர்களை தாக்கவும் கொலை செய்யவும் அவர்கள் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

“இந்நிலையில் கொடைக்கானலுக்கு வரும் யூதர்கள், இஸ்ரேலியர்களை கண்காணிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,” என ஊடகச் செய்தி மேலும் தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்