சென்னை: உரிமைத் தொகை கோரி மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு அது வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. அப்போது, அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்குவதாக அளித்த வாக்குறுதி என்னவானது என அதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உரிமைத்தொகை கோரி இதுவரை ஒன்பது லட்சம் பேர் மேல்முறையீடு செய்திருப்பதாகக் குறிப்பிட்டார். அவர்களில் தகுதி உள்ளவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்றும் கூறினார்.
“உரிமைத்தொகை திட்டத்தில் குறைகள் இருப்பின் ஆதாரங்களுடன் கூறலாம். 1.06 கோடி பேருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
“குறைகளை ஆதாரத்துடன் சொல்லுங்கள், நிவர்த்தி செய்கிறோம். மேல்முறையீடு செய்பவர்கள் அலைக்கழிக்கப்படுவதாக சொல்கிறீர்கள், அதற்கும் ஆதாரங்கள் தேவை,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.