திருவள்ளூர்: சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளன.
அந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 9.817 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 83 விழுக்காடு என்று தமிழக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த தண்ணீரை சென்னை குடிநீருக்கு தட்டுப்பாடின்றி 9 மாதத்திற்கு விநியோகம் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பருவமழை தொடங்குவதற்கு முன்பே குடிநீர் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் அடுத்த ஆண்டு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.