திமுக மாநாட்டில் சோனியா, பிரியங்கா

திமுக மாநாட்டில் சோனியா, பிரியங்கா

1 mins read
ebc16710-398a-45f8-a2d9-beaa2128e614
நாட்டில் பெண்களின் பாதுகாப்பு குறித்து திமுக மகளிர் உரிமை மாநாட்டில் பேசப்பட உள்ளது. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு சென்னையில் சனிக்கிழமை திமுக நடத்தும் மகளிர் உரிமை மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட தேசிய அளவிலான தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சுஹாசினி அலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனி ராஜா ஆகியோரும் திமுக நடத்தும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

அண்மையில் சட்டமாக்கப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் பாஜக அரசு செய்துள்ள குளறுபடிகள், மணிப்பூர் வன்முறை தொடர்பான பிரச்சினையில் மத்திய அரசின் அலட்சியப் போக்கு ஆகியவற்றுக்கு இந்த மாநாட்டில் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்ய உள்ளதாக எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், நாட்டில் பெண்களின் பாதுகாப்பு குறித்தும் வேலையின்மை பிரச்சினை குறித்தும் பேசப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்