கொள்ளிடம் மணல் குவாரியில் அமலாக்கத் துறை சோதனை

1 mins read
f43d0197-8177-4cc8-8acc-78fb7002cc41
கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் குவாரிகளைப் அதிகாரிகள் சோதனை செய்தபோது, மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். - படம்: ஊடகம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.

இதில் மணல் குவாரியின் ஆழம், அகலம் உள்ளிட்டவற்றை டிஜிட்டல் மீட்டர் கொண்டு அளவீடு செய்கின்றனர்.

மேலும் ‘ட்ரோன்’ கேமரா மூலம் மணல் பரப்பினையும் ஆய்வு செய்து செய்து வருகின்றனர்.

மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவைக் காட்டிலும் அதிக அளவில் மணல் அள்ளப்படுவதாகவும், முறைகேடுகள் நடந்துவருவதாகவும் புகார்கள் எழுந்தன.

அதன் அடிப்படையில் மணல் குவாரிகள், ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 12ம் தேதி அரசு மணல் குவாரி ஒப்பந்ததாரர் வீடு, அலுவலகம் மற்றும் மணல் குவாரிகளில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

குறிப்புச் சொற்கள்