சிதம்பரம் நடராசர் கோவில் கனகசபை நடைமுறையை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரமில்லை: உயர் நீதிமன்றம்

சிதம்பரம் நடராசர் கோவில் கனகசபை நடைமுறையை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரமில்லை: உயர் நீதிமன்றம்

1 mins read
283cc3f9-ed97-4e01-a1e4-807976672ce1
சென்னை உயர் நீதிமன்றம். - கோப்புப்படம்

சென்னை: சிதம்பரம் நடராசர் கோவிலின் கனக சபையில் இருந்து பக்தர்கள் கடவுளை வணங்கலாம் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு மே மாதம் 17ஆம் தேதி அன்று அரசாணை வெளியிட்டு இருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் டி.ஆர்.ரமேஷ் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

கனக சபையில் இருந்து தரிசனம் செய்வதற்கு அனுமதியளிக்கக் கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் அரசை முடிவெடுக்க அறிவுறுத்தியிருந்தது. அதன்படி தொற்றுக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை செய்து இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

மேலும் கனகசபை தரிசனத்தைத் தடுப்பது ஆலய நுழைவுச் சட்டத்துக்கு எதிரானது என்றும் விளக்கமளித்து இருந்தது. மேலும் இதனை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கூறியிருந்தது.

இதனை விசாரித்த நீதிமன்றம், சிதம்பரம் நடராசர் கனக சபையில் மாற்றம் செய்ய தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது.

மேலும் இந்து சமய அறநிலையத்துறை மனுவிற்குப் பதில் மனு அளிக்க மனுதாரருக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்