சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திங்கட்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது கூறுகையில், “திருச்செங்கோடு மருத்துவமனையில் குழந்தை விற்கப்படுகிறது என்ற செய்தி பரவியது.
“இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகு, மூன்றாவதாக பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பெற்றோரின் ஏழ்மை நிலை கருதி, அவர்களுக்கு ஆசை காட்டி, ஆண் குழந்தை என்றால் ரூ.5,000 என்றும் பெண் குழந்தையாக இருந்தால் ரூ.3,000 என்றும் விற்பனை செய்வதற்கான பணிகளை தரகர்கள் செய்கிறார்கள் என்ற செய்தி பரவியது.
“இந்தச் செய்தி வந்தவுடன், மாவட்ட ஆட்சித்தலைவர் உமா, சம்பந்தப்பட்ட காவல்துறை அலுவலர்களோடு ஐந்து நாட்களாக ரகசிய விசாரணை நடத்தியதில் லோகாம்பாள் என்ற இடைத்தரகர் சிக்கினார்.
“அனுராதா என்ற மகப்பேறு மருத்துவர், குழந்தை விற்பனைக்கு உடந்தையாக இருந்திருக்கிறார்.
“இவர்கள் மூலம் பல குழந்தைகள் பணத்திற்காக விற்கப்பட்டது தெரியவந்துள்ளது.
“ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவர் அனுராதாவும் இடைத்தரகர் லோகாம்பாளும் கைது செய்யப்பட்டனர்,” என்றார் அமைச்சர்.