சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் திங்கட்கிழமை (அக். 16) இரவு 10 மணியளவில் திடீரென சுழற்காற்று வீசியது.
சுழற்காற்று வீசியபோது, மெரினா கடற்கரை மணல் பரப்பில் காற்றுடன் மணலும் வானுயர எழுந்தது.
அதில் அங்கிருந்த சில கடைகள் சேதமடைந்தன. ஆனால் யாருக்கும் காயமில்லை எனக் கூறப்பட்டது.
எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்ட காணொளியில் சுழற்காற்று வீசுவதைக் காண முடிகிறது.
இத்தகைய சுழற்காற்று ஆங்கிலத்தில் ‘டஸ்ட் டெவில்’ என்று அழைக்கப்படுவதாக வானிலை ஆய்வாளர் ஒருவரை மேற்கோள்காட்டி ‘இடிவி பாரத்’ எனும் செய்தித்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. இது இயற்கையான நிகழ்வு என்று அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனாளர் ஒருவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள காணொளி:
பொதுவாக ‘டஸ்ட் டெவில்’ காற்றுக்கு அஞ்சத் தேவையில்லை என்றும் வழக்கமாக இது நிகழும்போது உயிர்களுக்கோ உடைமைகளுக்கோ பெரிய அளவிலான சேதம் ஏற்படுவதில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.


