இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவமனை

இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவமனை

1 mins read
a89c8066-dd5b-4991-8197-6c7400295ffb
மா.சுப்பிரமணியன். - படம்: ஊடகம்

சென்னை: இந்தியாவிலேயே முதன்முறையாக முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவமனை தமிழகத்தில் திறக்கப்பட உள்ளது.

சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள அம்மருத்துவமனை முழு வீச்சில் இயங்க தயார் நிலையில் இருப்பதாகவும் விரைவில் திறக்கப்பட உள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

“சென்னையில் உள்ள் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிறுகுடலைப் பரிசோதனை செய்வதற்கான கருவி இந்தியாவில் முதல் முறையாக நிறுவப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை வழங்குவதால், தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கூடி வருகிறது.

“இந்தியாவிலேயே முதல் முறையாக முதியோருக்கான மருத்துவமனை இங்கு திறந்து வைக்கப்பட உள்ளது. டெல்லி எய்ம்ஸ் மற்றும் சென்னை கிண்டியில் முதியோருக்கான மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிகள் முடிவடையவில்லை. சென்னை கிண்டியில் முதியோர் மருத்துவமனை அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, திறப்பு விழாவுக்கு தயார்படுத்தியுள்ளோம்,” என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்