மதுரை: தமிழகத்தின் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைந்தால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருங்காலத்தில் குலசேகரபட்டினத்தில் இருந்து ஏராளமான சிறிய ரக ராக்கெட்டுகளை ஏவுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
குலசேகரபட்டினத்தில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக தமிழக அரசு இரண்டாயிரம் ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்துள்ளது என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருந்தார். இதன் மூலம் ராக்கெட் ஏவும் செலவு குறையும் என்று அவர் கூறியதை தாம்ை ஆமோதிப்பதாக மயில்சாமி கூறினார்.
மேலும், நிலவில் தரையிறங்கியுள்ள சந்திரயான்-3 விண்கலம் உறக்க நிலைக்குச் சென்றுவிட்ட நிலையில் மீண்டும் அதை இயக்குவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் அவர் தெரிவித்தார்.

