ராமேசுவரம்: சில மணி நேரம் நீடித்த பலத்த மழை காரணமாக ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பக்தர்கள் அவதிக்கு ஆளாகினர்.
கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் மழை நீர் தேங்கியது. வியாழக்கிழமை காலை பெய்யத் தொடங்கிய மழை சுமார் மூன்று மணி நேரம் நீடித்தது என்றும் ராமேசுவரத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதாகவும் தினத்தந்தி் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
ராமநாதசுவாமி கோவி லுக்கு அருகே உள்ள லட்சுமணேசுவரர் கோவிலை சுற்றியும் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி நின்றது.

