மும்பை: தணிக்கை வாரிய அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக எழுந்துள்ள புகார் தொடர்பில் நடிகர் விஷாலின் உதவியாளரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.
தாம் நடித்த ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தை இந்தியில் திரையிட மும்பை தணிக்கை வாரிய அதிகாரிகளுக்கு ரூ.6.5 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக நடிகர் விஷால் குற்றஞ்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் மத்திய அரசு உடனடியாக அறிவித்திருந்தது. இயக்குநர் சமுத்திரக்கனி, தமது படம் ஒன்றை இந்தியில் வெளியிட இவ்வாறு லஞ்சம் கொடுத்ததாக கூறினார்.
இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், நடிகர் விஷாலின் உதவியாளர் ஹரி கிருஷ்ணனிடம் மும்பையில் வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மிக விரைவில், நடிகர் விஷாலிடமும் விசாரணை நடக்க இருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

