ஸ்டாலின்: கோவிலுக்குச் செல்வது அவரவர் விருப்பம்

ஸ்டாலின்: கோவிலுக்குச் செல்வது அவரவர் விருப்பம்

படம்: ஊடகம்

21 Oct 2023 - 9:56 pm

1 mins read

சென்னை: தாம் ஆன்மிகத்திற்கு எதிரி அல்ல என்றும் தன் மனைவி எந்தக் கோவிலுக்குச் செல்கிறார் என்பதைப் பார்ப்பதே பாஜகவின் வேலை என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

“இதுவரை 5,000 கோடி மதிப்பிலான கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டுள்ளோம். ஆனால், கோவில்களை இடித்துவிட்டதாக பொய்யான படங்களை வெளியிட்டு பாஜகவினர் அவதூறு பரப்புகின்றனர்.

“எனது மனைவி துர்கா ஸ்டாலின் கோவிலுக்குப் போவது அவரின் விருப்பம். தமிழ்நாட்டில் இருக்கின்ற எல்லா கோவிலுக்கும் அவர் செல்கிறார் எனில் அவரது விருப்பத்தை நான் தடுக்கவில்லை. கோவிலும் பக்தியும் அவரவர் விருப்பம்,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.