திருத்தணி: விரைவு ரயிலை கவிழ்க்க நடந்த சதி முறியடிக்கப்பட்டது.
பீகார் மாநிலத்தில் இருந்து பெங்களூருக்கு செல்லும் விரைவு ரயில் வெள்ளிக்கிழமை இரவு திருத்தணி வழியே சென்றது.
அந்த ரயில் செல்லும் தண்டவாளத்தில் பத்து கிலோ எடைகொண்ட சிமெண்ட் கற்கள் வைக்கப்பட்டிருந்ததன.
இதைக் கவனித்த ஓட்டுநர் துரித கதியில் செயல்பட்டு ரயிலை நிறுத்தினார். பின்னர் பயணிகளின் உதவியோடு அந்தக் கற்களை அகற்றிய அவர், மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, மீண்டும் ரயிலை இயக்கினார்.
இதுகுறித்து திருத்தணி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

