பிரதமர் வேட்பாளர் யார் என ‘இண்டியா’ கூட்டணிக்கு பழனிசாமி கேள்வி

பிரதமர் வேட்பாளர் யார் என ‘இண்டியா’ கூட்டணிக்கு பழனிசாமி கேள்வி

1 mins read
fd144fbf-69dc-4462-97b5-3902814b0684
பழனிசாமி. - படம்: ஊடகம்

தென்காசி: அதிமுக ஆட்சியில்தான் தமிழகம் அனைத்து துறைகளிலும் முதலிடம் பிடித்தது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் 52வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, தென்காசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் சிறப்்பான கூட்டணி அமைக்கப்படும் என்றார்.

“நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக யாரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் என்று கேட்கிறார்கள். ‘இண்டியா’ கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்று கூற முடியுமா?

“அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவோம். தமிழக மக்களின் நலனுக்காக என்றும் குரல் கொடுப்போம்,” என்றார் எடப்பாடி பழனிசாமி.

குறிப்புச் சொற்கள்