சென்னை: தமிழகக் காவல் துறையில் பெண்கள் பிரிவு தொடங்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி, அனைத்து பெண் காவலர்களையும் சிறப்பிக்கும் வகையில் சிறப்புப் பதக்கம் வழங்கப்பட உள்ளதாக இந்து ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
தமிழகக் காவல்துறையில் உள்ள பல்வேறு பிரிவுகளில் 1,20,000 பேர் பணியில் உள்ளனர்.
தமிழகக் காவல் துறையின் சிறப்பான செயல்பாட்டால் ராணுவம், துணை ராணுவத்துக்கு வழங்கப்படும் உயரிய கௌரவமான ‘அதிபரின் வண்ணக்கொடி‘ தமிழக காவல் துறைக்கு 2022ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
இதற்காக வழங்கப்பட்ட சிறப்பு இலட்சினை தற்போது அனைத்து காவலரின் சீருடையையும் அலங்கரித்து வருகிறது.
தற்போது டிஜிபி தொடங்கி காவலர்கள் வரை மொத்தம் 35,329 பெண் காவலர்கள் பணியில் உள்ளனர்.
“தமிழகக் காவல்துறையில் பெண் காவலர்கள் பணிக்கு வந்து இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல்வர் தலைமையில், மகளிர் காவலர்களின் ‘பொன்விழா’ கொண்டாடப்பட்டது.
“இந்நிலையில், பணியில் உள்ள காவலர்கள் முதல் அதிகாரிகள் வரையிலான அனைத்து பெண்களுக்கும் சிறப்புப் பதக்கம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது,” என ஊடகச் செய்தி மேலும் தெரிவிக்கிறது.

