நாகர்கோவில்: அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவருக்கும் மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த அரசு மருத்துவர் ஆண்டனி சுரேஷ் நாகர்கோவில் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வரும் ஆண்டனி சுரேஷ் மீது மாணவிகள் சிலர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து விசாரணை தொடங்கியது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிகழமை மாலை பெண் மருத்துவர் ரேஷ்மா என்பவரும் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து ஆண்டனி சுரேஷ் சிங் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை கைது செய்தது.