சேரன்மகாதேவி: திருநெல்வேலி மாவட்டத்தின் சேரன்மகாதேவி பேரவை உறுப்பினர் பா.வேல்துரை (73) உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை காலமானார்.
1996ஆம் ஆண்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இதே தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரானார்.
2006இல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு சேரன்மகாதேவி தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2011இல் ஆண்டில் ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட வேல்துரை தோல்வியடைந்தார்.
இவர் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த வேல்துரை, செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு முத்துக்கனி என்ற மனைவி, சௌந்தர்யா, ஷீலா, அனிதா ஆகிய 3 மகள்களும், வி.பி. துரை என்ற மகனும் உள்ளனர்.

